சர்வதேச படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகல்!

Sinioj
புதன், 10 ஏப்ரல் 2024 (15:01 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் சென்னை ஸ்டோரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இவருக்கு முன்னதாக சமந்தா இப்படத்தில் ஒப்பந்தமான நிலையில் தசை அழற்சி பிரச்சனை காரணமாக விலகினார்.

இப்படம் டிமேரி என் முராரியின் அரேஞ்மெண்ட் ஆப்  என்ற நாவலின் அடிப்படையில் உருவாகும் இப்படப்பிடிப்பு சென்னையில் தொடக்க இருந்தது.

தற்போது ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமான நிலையில், அவர் இதில், அனு என்ற டிடெக்ட்டிவ்வாக  நடிக்க இருந்தார்.

அவருடன் இணைந்து, இப்படத்தில் விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படப்பிடிப்பு வேலைகள்  நடந்து வரும் நிலையில், திடீரென்று ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில்  இப்படத்தில் இணைந்தது உற்சாகமளிக்கிறது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்