அப்பா அம்மா பிரிந்தது நல்லதுதான்… ஸ்ருதிஹாசன் பதில்!

செவ்வாய், 25 மே 2021 (16:28 IST)
நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தையும் தாயும் விவாகரத்து செய்தது கூட ஒருவகையில் நல்லதுதான் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன். ஆனால் அவர்கள் இருவரும் சிறு வயதாக இருக்கும்போதே கமலும் சரிகாவும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் இப்போது ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகிய இருவரும் நடிகைகளாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது தாயும் தந்தையும் பிரிந்தது குறித்து பேசியுள்ளார். அதில் ‘அவர்கள் இருவரும் பிரிந்தது கூட ஒருவகையில் நல்லதுதான். இருவரும் பிரிந்து வாழவேண்டுமென முடிவெடுத்த பின் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை. ஆனால் இப்போது இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்