ஹீரோவுக்கு ஒரு வேடம்தான்…ஆனால், ஹீரோயினுக்கு இரண்டு வேடம்

ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (16:17 IST)
‘சாஹு’ படத்தில் நாயகியாக நடிக்கும் ஷ்ரத்தா கபூர், இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். 


 

 
‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹு’. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். 
 
அதுவும் இரண்டு வேடங்களில். ஹீரோயின், ஆக்‌ஷன் என ’10 எண்றதுக்குள்ள’ சமந்தாவைப் போல் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். ஆனால், ஹீரோ பிரபாஸுக்கு ஒரு வேடம்தானாம். இந்தப் படத்தில் வில்லன்களாக நீல்நிதின் முகேஷ் மற்றும் மந்த்ரா பேடி இருவரும் நடிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்