மீரா மிதுன் இறந்து விட்டாரா? என் மகளை காணும் கதறி அழும் தாயார்

சனி, 12 செப்டம்பர் 2020 (11:52 IST)
அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர். இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அவரால் பாதிக்கப்பட்ட சிலர் குற்றவாளியை ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதித்தீர்கள் என எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து சேரன் மீது அபாண்ட பழி சுமத்தி மீரா மிதுன் பிக்பாசில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசி தனக்கு தானே பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார்.

அந்தவகையில் விஜய் , சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு திட்டி தீர்த்தனர். ஆனாலும், அடங்காமல் தொடர்ந்து எதையாவது செய்து பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது ட்விட்டரில் " தான் இறந்து விட்டதாகவும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது RIP" என்று பதிவிட்டு சர்ச்சை கிளப்பினார்.

தற்ப்போது இதுகுறித்து பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மீரா மிதுனின் தாயார், "என்னுடைய மகள் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. யார் அந்த ட்வீட் போட்டார்கள் என்று கூட தெரியவில்லை. இன்னும் எனக்கு போன் கூட பண்ணல என்று கூறி  அழுது புலம்பி இருக்கிறார். இதை பார்த்ததும் ஒருவேளை உண்மையிலே மீரா மிதுனுக்கு ஏதேனும் சம்பவம் நடந்திருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்