அதில்’கைலாஷா’ நாட்டில் உங்களுடைய ஓட்டல் கிளை அமைக்க அனுமதிக்குமாறு எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவிடுகிறேன் என்றும், இதுகுறித்து விரைவில் எங்களது அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் பொது மக்கள் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட உடன் ’கைலாஷா’ நாட்டில் உங்கள் ஹோட்டல் திறப்பதற்கு கண்டிப்பாக அனுமதி கிடைக்கும் என்றும் கூறினார்.
இல்லாத ஒரு நாட்டிற்கு நாணயங்களை வெளியிட்டதோடு தற்போது ஓட்டலும் நடத்த அனுமதி கொடுத்துள்ள நித்தியானந்தா அடுத்து இதற்கு சொன்ன சொல்வார் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளைஞர்கள் சிலர் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர் அதில், நோ சூடு நோ சொரணை என்றும், நித்தியானந்தாவிடம் கைலாசா தீவில் என்ன ஸ்பெஷல் உள்ளது என்பது போலவும் கேள்வி எழுப்புவதுமாதிரி தெரிவித்துள்ளனர்.