பிரபல நடிகை கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப் குறித்து பல தகவல்கள் வந்தவாறு உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் மலையாள திரையுலகினர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைதான நடிகர் திலீப் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் திலீப் குறித்து ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகர் திலீப். ஆனால் அதன் பின்னர் நடிகை காவ்யா மாதவன் மீது காதல் வர மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார் திலீப். இது தான் அனைவரும் அறிந்த கதை.
ஆனால் இவர்கள் இருவர்களுக்கு முன்னர் நடிகர் திலீப் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து இருந்திருக்கிறார். அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு தான் அவர் மஞ்சு வாரியரை திருமணம் செய்திருக்கிறார். இந்த முதல் மனைவி விவகாரம் மஞ்சு வாரியார், காவ்யா மாதவன் இருவருக்கும் இதுவரை தெரியாதாம்.
திலீப் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் தனது தூரத்து உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்திருந்தார். ஆனால் சினிமாவுக்கு வந்த பின்னர் நடிகை மஞ்சு வாரியருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனை உறவினர்கள் திலீப்பின் மனைவியிடம் கூறியுள்ளனர். அதன் பின்னர் தான் திலீப் அந்த முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். அந்த பெண் தற்போது வளைகுடா நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.