சினிமாவில் அறிமுகமாகும் ஷங்கரின் மகன் !

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (22:36 IST)
இயக்குநர் ஷங்கரின் மகன் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ்,சிவாஜி  எந்திரன், 2.0  உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து பிரமாண்டமாக ஒரு பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இவரது மகள் அதிதி கார்த்தியுடன் விருமன் என்றற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ள  நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித்தும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்