வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்பட்த்தின் சண்டைக்காட்சிக்காக ஒரு மாதம் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், விக்ரம் பட புகழ் மெய்யறிவுதான் இப்படத்திற்கு சண்டைக்காட்சி அமைக்கவுள்ளார்கள் என்றும் இதற்காக ரூ.6 கோடி செலவு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இதனால், ரசிகர்கள் ஆச்சர்யத்தின் மூழ்கியுள்ளனர்.