தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் பாடல்களுக்காக மட்டுமே சுமார் 90 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, படத்தின் பட்ஜெட் திட்டமிடப்பட்டதைவிட அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தயாரிப்பாளர் தில்ராஜு இந்த படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவெடுத்து ஷங்கர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரிடமும் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.