அமெரிக்காவில் நடிகர் விஜய் ...வைரலாகும் புகைப்படம்

புதன், 30 ஆகஸ்ட் 2023 (13:05 IST)
நடிகர் விஜய், வெங்கட்பிரபு உள்ளிட்ட 'விஜய்68 'படக்குழுவினர்  அமெரிக்காவில் உள்ள லாஞ்ஏஞ்சல்ஸ்  நகரத்திற்கு  சென்றடைந்தனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்  நடிக்கவுள்ள  ‘விஜய் 68’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும்  இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதால், ஒரு கேரக்டரருக்கு நடிகை ஜோதிகாவும் மற்றொரு கேரக்டருக்கு  ஜோடியாக   பிரபல  நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும், ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க டாடா பட நடிகை அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. 

இப்படத்தில் கேப்டன் மில்லர் படத்தின்  ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில்  இப்படத்தின் போட்டோஷூட் காட்சிகள் எடுப்பதற்காக நடிகர் விஜய், வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் அர்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமீபத்தில் அமெரிக்க செல்வதாக தகவல் வெளியான நிலையில், இன்று அதிகாலையில்  அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரித்திற்குச்  சென்றுள்ளனர்.

அங்குள்ள 3 டி விஎஃஎக்ஸ் ஸ்கான் தொழில் நுட்பமுறையில் 'விஜய்68' பட டெஸ்ட் லுக் எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த  நிலையில்,  நடிகர் விஜய்யின் உடல் முழுவதும் ஸ்கேன் செய்து,  விஜய்யின் தோற்றத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் வடிவமைப்பு செய்யவே, ஸ்கேன் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகும்  நிலையில், இன்று அமெரிக்கா சென்றுள்ள விஜய்யின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்