2.0 வெற்றியை தொடர்ந்து அடுத்தப் படத்திற்கு நாள் குறித்த ஷங்கர்!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (11:25 IST)
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும், 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் இதில் நடித்துள்ள 2.0 படத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தரும் பாஸிட்டிவ் விமர்சனங்களால் பரவசம் அடைந்திருக்கிறார் ஷங்கர். 
 
இந்த வெற்றிக் களிப்போடு இந்தியனின் அடுத்தப் பாகத்தை இயக்கத் தயாராகிவிட்டார் ஷங்கர். நடிகர் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் மேலோங்கிக் கிடக்கிறது. 
 
கமலுடன் இணைந்து, சிம்பு, துல்கர் சல்மான், நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோரும் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன.  இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். 
 
இந்நிலையில் இந்தியன் 2 படபிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி துவங்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்