சர்வதேச திரைப்பட விழாவில்’ ஷகிலா’ : குஷியான ரசிகர்கள்

திங்கள், 1 ஜூலை 2019 (15:56 IST)
தென்னிந்தியாவில் நடிகை ஷகிலாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் படங்களையே பின்னுக்குத் தள்ளி தன் கவர்ச்சி படங்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தியவர் ஷகிலா. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஷகிலா என்ற படம் தயாராகிவருகிறது.
இப்படத்தை இந்திரஜித் என்ற இயக்குநர் இயக்கிவருகிறார். இப்படத்தில் ஷகிலாவின் ஆளுமைப்பண்புகள், அவரது வாழ்வில் இதுவரை யாரும் அறிந்திராத சம்பவங்கள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
ஷகிலா படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா நடிக்கிறார். நடிகை ஷகிலாவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் ரிலீஸாகிறது. மேலும் ஷிகிலா படத்தை சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.இதனால் ரசிகர்ள் குஷியாகியுள்ளனர். ஷகிலா படத்தையும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்