குஷி படத்தை அடுத்து இன்னொரு விஜய் படம் ரீரிலீஸ்.. அதுவும் சூப்பர் ஹிட் படம் தான்..!

Siva

வியாழன், 18 செப்டம்பர் 2025 (16:50 IST)
விஜய் நடிப்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'குஷி'. வெளியாகி 25 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப் படம் நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில், 'குஷி' திரைப்படத்தின் மறு வெளியீட்டு பணிகளை மேற்கொண்டு வரும் சக்திவேலன், இப்படம் குறித்து பேசினார். "குஷி திரைப்படத்தை மீண்டும் வெளியிட சரியான நேரத்திற்காகக் காத்திருந்தோம். தற்போதுதான் அதற்கான நல்ல காலம் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.
 
மேலும், செப்டம்பர் 25-ஆம் தேதி 'குஷி' திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், விஜய்யின் மற்றொரு வெற்றிப் படமான 'சிவகாசி' படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் சக்திவேலன் அறிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்