ஜவான் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

செவ்வாய், 4 ஜூலை 2023 (15:23 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாக ஜவான் அமைந்துள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஜூலை 12 ஆம் தெதி வெளியாகவுள்ள டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்தோடு ஜவான் படத்தின் டிரைலரை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்