படும் குண்டாக இருந்த மஞ்சிமா மோகனா இது? திருமணத்திற்கு பின் இப்படி ஸ்லிம் ஆகிட்டாங்களே!

திங்கள், 12 ஜூன் 2023 (12:00 IST)
தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் பின்னர் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர்.
 
இதையடுத்து அவர்களின் திருமணம் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
 
திருமணத்தின் போது படுகுண்டாக இருந்த மஞ்சிமா தற்போது செம ஸ்லிம்மாக உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்தில் மாறிவிட்டார். இந்த லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாக ரசிகர்கள் எல்லோரும், அட நம்ம மஞ்சிமாவா இது என ஷாக்காகி லைக்ஸ் குவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்