கொரோனாவால் வறுமை: காய்கறி விற்கும் சின்னத்திரை இயக்குனர்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (18:25 IST)
கொரோனாவால் வறுமை: காய்கறி விற்கும் சின்னத்திரை இயக்குனர்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கோடிக்கணக்கானோர் வேலை இழந்து வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இதற்கு திரையுலகினர்களும் விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த இயக்குனர் ராம் விரிக் ஷா கவுர் என்பவர் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் சொந்த ஊருக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் 
 
இவர் பிரபல நடிகர் ஒருவரை வைத்து இந்தி படத்தை இயக்க இருந்ததாகவும் ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அந்த படத்தை தயாரிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்று தயாரிப்பாளர் கூறியதால் வாழ்வாதாரத்திற்காக அவர் சொந்த ஊருக்கு சென்று காய்கறி விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மும்பையில் தனக்கு சொந்த வீடு இருந்தாலும் அங்கு வருமானத்திற்கு எந்த வழியும் இல்லாததால் சொந்த ஊர் வந்து விட்டதாகவும் இங்கு தனது தந்தை மற்றும் மகனுடன் சேர்ந்து காய்கறி வியாபாரம் செய்து வருவதாகவும் இதில் நல்ல வருமானம் வருவதால் நிலைமை சரியாகும் வரை காய்கரி விற்பனை செய்ய இருப்பதாகவும் இதன் தனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
கொரோனா வறுமையால் சின்னத்திரை இயக்குனர் ஒருவர் காய்கறி விற்று வருவதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்