சாணிக்காயிதம் படத்தில் தனது கெட்டப்பை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவன்!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:53 IST)
இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

இயக்குனர் செல்வராகவன் தான் ஒரு படத்தில் நடிக்கபோவதாக அறிவித்த போதே அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதையடுத்து அவரும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் படம் பற்றிய அப்டேட்டுகளையும் புகைப்படங்களையும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தடைபட்டு இருந்த படப்பிடிப்பு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள இயக்குனர் செலவராகவன் தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்