நயன்தாரா இயக்குனர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய வெப் சீரிஸ்!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:10 IST)
இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஆர்யாவின் மீதான கவனம் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பின் பல மடங்கு அதிகமாகியுள்ளது. இதனால் வரிசையாக அவர் நடித்துள்ள படங்களின் ரிலிஸ் திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளாராம். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸாக உருவாக உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்