கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல: செல்வராகவன் விரக்தி

சனி, 31 டிசம்பர் 2022 (18:47 IST)
கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கவில்லை என தெரியவில்லை என செல்வராகவன் விரக்தியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தத்துவமாக டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருவார் என்பதும் சமீபத்தில் கூட அவர் பதிவு செய்த ஒரு டுவிட் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பினர் என்பதையும் பார்தோம்.
 
இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்கு மட்டும் கடவுள் ஏன் கொடுக்கவில்லை என விரக்தியுடன் பதிவு செய்த டுவிட் தற்போது வைரல் ஆகியுள்ளது. அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு “ கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல “ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள். 
 
~~~அனுபவம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்