இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இடையில் அவர் நடிகராக அறிமுகமான சாணிக்காயிதம் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது செல்வராகவன் பகிர்ந்த ட்வீட் ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதில் “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” எனப் பதிவிட, அது கவனம் பெற்றுள்ளது.