சீனு ராமசாமியை முட்டாள் என்றே நினைத்திருந்தேன் - பாலா

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (15:14 IST)
மிஷ்கின் முதல் சீனு ராமசாமிவரை யாரையும் ஒருமையில் டா போட்டு பேசக்கூடியவர் இயக்குனர் பாலா. சீனு ராமசாமியின் தர்மதுரை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் பாலாவின் ஒருமைப் பேச்சு தொடர்ந்தது.


 
 
சீனு ராமசாமி தென்மேற்குப் பருவக்காற்று படத்தை எடுத்த போது, பாலுமகேந்திராவின் மனைவி அந்தப் படத்தை பார்க்கும்படி பாலாவிடம் சொல்லியிருக்கிறார். காரணம், பாலுமகேந்திராவிடம் பாலா அசிஸ்டெண்டாக இருந்த போது சீனு ராமசாமி பாலாவின் ஜுனியர்.
 
இந்த சம்பவத்தை பேச்சில் குறிப்பிட்ட பாலா, அதுவரைக்கும் நான் சீனுவை முட்டாள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த படத்தை பார்த்த பிறகு கிட்டத்தட்ட ஒரு வாரம் என்னால் தூங்க முடியவில்லை. படம் சம்பந்தப்பட்ட அனைவரிடம் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தேன் என்றார்.
 
சீனு ராமசாமி படத்தில் பெண்களை கண்ணியமாக காட்டக் கூடியவர், உணர்வுபூர்வமான காட்சிகளை எடுக்க அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார் பாலா.
 
தர்மதுரை படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்