இயக்குனர் லிங்குசாமி எடுக்கவிருக்கும் படத்துக்கு தடைவிதிக்க சொல்லி சீமான் தென்னிந்திய திரைப்பட கதாசிரியர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம்.
இயக்குனர் லிங்குசாமி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தை எடுக்க கூடாது என இயக்குனரும் அரசியல்வாதியுமான சீமான் கதாசிரியர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம். இதற்குக் காரணம் என்னவென்று விசாரித்தால் அதற்கு 8 வருடத்துக்கு முந்தைய பிளாஷ்பேக்குக்கு செல்லவேண்டியுள்ளது.
இயக்குனர் லிங்குசாமி சூர்யாவை வைத்து முதலில் படம் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியான போது அது தன்னுடைய கதை என்று சீமான் கூறினார். இது சம்மந்தமாக சூர்யா இரண்டு கதையையும் கேட்டபோது ஒன்று போலவே இருப்பதாகக் கூறியுள்ளார். அதனால் அந்த கதையை படமாக்கக் கூடாது என சீமான் கூறியுள்ளார். அந்த பேச்சுவார்த்தையின் போது சீமான் தான் விரைவில் அந்த கதையை படமாக்கப் போவதாகவும், அதில் தாமதம் ஏற்பட்டால் வேண்டுமானால் லிங்குசாமி படமாக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில் இப்போது 8 ஆண்டுகளாக சீமான் எந்த படத்தையும் இயக்காததால் லிங்குசாமி தைரியமாக அந்த கதையை தெலுங்கில் இயக்க முன்வந்துள்ளார். ஆனால் இப்போதும் சீமான் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.