சத்ரியன் படத்துக்கு யு சான்றிதழ்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (17:03 IST)
சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்ளை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனின் புதிய படம் சத்ரியன். விக்ரம் பிரபு  நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

 
ஆக்ஷன் படமாக தயாராகியிருக்கும் சத்ரியனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மஞ்சிமா மோகன், ஐஸ்வர்யா தத்தா என இரு நாயகிகள். படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
 
அஜித்தின் விவேகம் படத்தை தயாரித்துவரும் சத்யஜோதி நிறுவனம் சத்ரியனை தயாரித்திருப்பதால் படத்தை வாங்க  விநியோகஸ்தர்கள் மத்தியில் ஆர்வம் உள்ளது.
அடுத்த கட்டுரையில்