மீண்டும் இயக்குனர் ஆகும் சசிகுமார்.. குற்றப் பரம்பரை சீரிஸ் தொடங்குவது எப்போது?

vinoth

செவ்வாய், 18 மார்ச் 2025 (15:38 IST)
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் குற்றப் பரம்பரையினர் சம்மந்தமான கதையை வெப் சீரிஸாக உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் நாவலில் இருந்து தழுவி உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா என பல மொழிக் கலைஞர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டே இந்த சீரிஸ்க்கான அறிவிப்பு வெளியானாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்த சீரிஸின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய தொடர்களுக்குப் பிறகு சசிகுமார் இந்த தொடரின் மூலம் இயக்குனர் பொறுப்பை ஏற்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்