சசிகுமாரின் மூன்று ஹீரோயின்கள் இவர்கள் தான்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (05:17 IST)
பிரபல நடிகர், இயக்குனர் சசிகுமார் நடிக்கும் 'கொடிவீரன்' என்ற படத்தை 'கொம்பன்' முத்தையா இயக்கவுள்ளார் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.



 


இந்த நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களது தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த மூன்று நாயகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிமா, பூர்ணா, சானுஷா ஆகிய மூன்று நடிகைகள் தான் இந்த படத்தின் மூன்று நாயகிகள்.

சசிகுமாரின் 'சசிகுமார் புரடொக்ஷன்ஸ்' நிறுவனத்தின் 10வது படமாக உருவாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தில் ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது பெயர் படப்பட்டியலில் இடம்பெறவில்லை. மேலும் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

 
அடுத்த கட்டுரையில்