"பக்கத்துல எப்பவும் ஒரு பொண்ணு இருந்தா எனர்ஜி கிடைக்கும்" - விஜய் ரொமான்ஸ்

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (16:31 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தின் நியூ ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
 
சர்கார் திருட்டு கதை என்ற பிரச்சனை ஒரு வழியாக முடிவடைந்து படம் வரும் நவம்பர் 2ம் தேதி தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது.அதனால் படத்தின் புரொமோஷன் வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், சற்றுமுன் வெளிவந்துள்ள ஒரு ப்ரோமோஷன் வீடியோ ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷின் டூயட் பாடலான ஓஎம்ஜி பொண்ணு பாடலின் பட காட்சிகள் இடப்பெற்றுள்ளது. 
 
மேலும் அதில் ஒரு சண்டை காட்சியும் இடம்பெற்றுள்ளது அதில் நடிகர் விஜய் அரசியல்வாதிகளை அடிப்பது போன்ற காட்சிகள் இடப்பெற்றுள்ளது. அந்த ஒரு காட்சியை  மாஸ் ஆக்சனோடு தெறிக்க விட்டிருக்கிறார் தளபதி விஜய். 
 
"பக்கத்துல எப்போவுமே ஒரு பொண்ணு இருந்தா, சின்னதா ஒரு எனர்ஜி கிடைக்கும்" என விஜய் கீர்த்தி சுரேஷை பார்த்து சொல்லும் ரொமாண்டிக் வசனமும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ப்ரோமோ விடியோ தற்போது ரசிகர் மத்தியில் வைரலாகியுள்ளது. 


 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்