சரத்குமார்-கெளதம் கார்த்திக் படம்: விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்!

திங்கள், 2 மே 2022 (18:27 IST)
பிரபல நடிகர் சரத்குமார் இளம் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் I B கார்த்திகேயன் திரிபுரா கிரியேஷன்ஸ் & டாரஸ் சினி கார்ப் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதையை திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை ராமமூர்த்தி என்பவர் இயக்க உள்ளார் என்பதும் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த படம் குறித்து இயக்குனர் ராமமூர்த்தி  கூறுகையில், ‘இதுவரை சரத்குமார் தனது படங்களில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்ததை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தப்படத்தில் அவர் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக மதுரை வட்டார வழக்கு மொழியுடனும், உடல்மொழியுடனும் அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாக நடிக்கவுள்ளார்’ என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்