சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஹன்சிகா!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:03 IST)
சந்தானம் நடிப்பில் உருவான தில்லுக்கு துட்டு இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றது.

லொள்ளு சபா மூலமாக தமிழ் படங்களை ஓட்டி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் இயக்குனர் ராம்பாலா. பின்னர் சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி தன்னை ஒரு சினிமா இயக்குனராகவும் நிருபித்தார். இதையடுத்து அவர் இப்போது அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தமிழ்ப்படம் சிவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படமும் கலகலப்பான பேய்க் காமெடி படம் என சொல்லப்படுகிறது. இடியட் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதையடுத்து சந்தானம் மீண்டும் ராம் பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஹன்சிகாவை அனுகுமாறு சந்தானம் கேட்டாராம். ஆனால் ஹன்சிகா நடிக்க முடியாது என சொல்லிவிட்டதால் இப்போது வேறு கதாநாயகியை தேடி வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்