சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

Mahendran

வியாழன், 24 ஏப்ரல் 2025 (17:42 IST)
நடிகர் சிம்பு நடிக்க உள்ள 49வது படத்தில், காமெடி நடிகராக  தனக்கே உரித்தான கதாபாத்திரத்தில் சந்தானம் களமிறங்க உள்ளதாக, இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது, இந்த தகவலை சந்தானம் தனது சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
 
அவர் கூறியதாவது: STR 49 படத்துக்காக சிம்பு நேரிலேயே எனக்கு அழைப்பு கொடுத்தார். 'நான் ஒரு படம் பண்றேன், அதில் நீங்களும் நடிக்கணும்' என்றார். அவர் கேட்டதும், தயங்காமல் உடனே ஒத்துக்கொண்டேன். அந்த அளவுக்கு, சிம்புவிடம் எனக்கு மரியாதையும் நன்றியும் இருக்கு."
 
"சிம்பு என்னை அழைத்ததுமே, வேறெந்த யோசனையும் இல்லாமல் ஒகே சொல்லிட்டேன். ஏற்கனவே வேறொரு படத்துடன் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருந்தாலும், அந்த தயாரிப்பாளரிடம் நேரில் மன்னிப்பு கேட்டு அனுமதி பெற்ற பிறகு, சிம்புவின் படத்தில் சேர்ந்தேன். எங்கள் கூட்டணி மீண்டும் திரையில் வேற லெவலாக உங்களுக்காக காத்திருக்குது!" என உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சந்தானம்.
 
இந்நிலையில், ‘STR  49’ படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்