ஆனால் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதனால் சில மாதங்கள் கழித்து இப்போது ரிலீஸுக்கு திட்டமிட்டு பிஸ்னஸ் விஷயங்களை ஆரம்பித்துள்ளார். ஆனால் இடையில் வெளியான சந்தானத்தின் படங்கள் சரியாக ஓடாததால் இப்போது திரையரங்க உரிமையைக் கம்மியான தொகைக்கு விநியோகஸ்தர்கள் கேட்கிறார்களாம். அதனால் தயாரிப்பாளருக்கு சில கோடிகள் நஷ்டமடைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.