சிம்புவுக்கு சம்மதம் சொல்வாரா சந்தானம்?

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (15:20 IST)
சிம்பு இயக்கத்தில் பாதியில் கைவிடப்பட்ட ‘கெட்டவன்’ படம், மறுபடியும் தொடங்க இருக்கிறது.
 



ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தைப் பார்த்த பிறகும்கூட, எந்த தயாரிப்பாளராவது சிம்புவை வைத்துப் படமெடுக்க முன்வந்தால், நாமே தாராளமாக அவரைக் கடலில் பிடித்து தள்ளிவிடலாம். அந்த அளவுக்கு ரசிகர்களே சிம்புவின் மீது கடுப்பாகிக் கிடக்கிறார்கள். சிம்புவை வைத்துப் படமெடுக்க எந்த இயக்குனரும், தயாரிப்பாளரும் முன்வராததால், ஏற்கெனவே தான் இயக்கி பாதியிலேயே விட்ட ‘கெட்டவன்’ படத்தைத் தூசி தட்டுகிறார் சிம்பு.

டி.ஆர். தயாரிப்பில், லேகா வாஷிங்டன், நமிதா மற்றும் சந்தானத்தை முக்கிய கேரக்டர்களாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. ‘மன்மதன்’ கதை போலவே இருக்கும் இந்தப் படத்தில், கெட்டவனாக நடித்திருக்கிறார் சிம்பு. 40 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் கைவிடப்பட்ட இந்தப் படத்தை, மறுபடியும் இயக்கப் போகிறார் சிம்பு என்கிறார்கள். சந்தானம் ஹீரோவாக நடிப்பதில் பிஸியாக இருப்பதால், மறுபடியும் காமெடியான நடிப்பது சந்தேகம்தான். ஆனாலும், நண்பனுக்கு நடித்துத் தருவார் என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்