நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் வருத்தபடாத வாலிபர் சங்கம். அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து தற்போது முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது இந்த படம் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் பட ஷூட்டிங் இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் அதில் நடித்து முடித்ததும் ஆகஸ்ட்டில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.