சமுத்திரகனி நாயகனாகநடிக்கும்புதிய படம்!

J.Durai

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (06:57 IST)
" முதல் கனவே"
"அதே நேரம் அதே இடம் " "ஆட்டி" படங்களை தயாரித்து வெளியிட்ட இசக்கி கார்வண்ணன்
"பகிரி" "பெட்டி கடை" "தமிழ் குடிமகன்" ஆகிய மூன்று படங்களை தயாரித்து டைரக்ட் செய்து வெளியிட்டார்.
 
 அடுத்து லட்சுமி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இசக்கி கார்வண்ணன்  7வது படைப்பாக சமுத்திரகனி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். 
 
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள அழகிய இடங்களில் வளர உள்ளது.
 
பிரபல முன்னணி கதாநாயகி சமுத்திரகனியின் ஜோடியாக நடிக்கிறார். 
 
அவரது பெயரை அறிவிக்காமல்
ரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.
 
ராம்பிரபு தயாரிப்பு நிர்வாகத்தில் முன்னனி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு பெறும் இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் பெயர்களை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.
 
"கண்டுபிடி கண்டுபிடி"
"ஐ.பி.சி. 376" ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பாராமன் தமது மூன்றாவது படைப்பாக இதை டைரக்ட் செய்து வருகிறார்.
 
கதையை பற்றி அவர் கூறியதாவது :- 
 
அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் தீயவர்களை தட்டி கேட்கும் கதைகள் ஆயிரம் வந்துள்ளது. ஆனால் இந்த கதை முற்றிலும் மாறுபட்டது. முழுவதும் வேறுபட்டது . 
அநியாயத்தை இவன் எதிர் கொள்வதே சிறப்பாக மட்டுமல்ல மக்களின் கைதட்டலோடு காட்சிகள் நகரும் .
திரில்லும், திகிலும் மட்டுமல்ல மிரட்டலும் சேர்ந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். மதுரை வட்டார வழக்கில் "நறுக்"கான வசனம் எழுதி இருக்கிறேன். 
 
சமுத்திரகனி சார் கதையை நான்கு மணி நேரத்தில் படித்து விட்டு  பாராட்டினார். அதுவே எனக்கு மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் இப்படத்தை டிசம்பருக்குள் ரிலீஸ் செய்யலாம் என்று கூறி இருக்கிறார். படத்தின் டைட்டிலை பிரபல கதாநாயகன் அறிமுகப்படுத்த இருக்கிறார் என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்