தனுஷ் படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (06:37 IST)
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின்னர் 'வடசென்னை' படத்தில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 


இந்த நிலையில் 'வடசென்னை' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் சமுத்திரக்கனி முதன்முதலாக மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி தனுஷ் கேரக்டருக்கு இணையாக சமுத்திரக்கனியின் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மூன்று பாகங்களாக வெளிவரவுள்ள இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.,
அடுத்த கட்டுரையில்