யு டர்ன் படத்தை தயாரிக்கும் சமந்தா?

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (16:29 IST)
கன்னடத்தில் கிரவுட் பண்ட் மூலம் தயாரான லூசியா விமர்சகர்களின் பாராட்டை பெற்றதுடன் நல்ல வசூலையும் பெற்றது. அதனை இயக்கிய பவன் குமார் அடுத்து இயக்கிய யு டர்ன் திரைப்படமும் வெற்றி பெற்றது.


 
 
யு டர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிப்பதாகவும், ரீமேக்கை அவரே தயாரிப்பதாகவும் பல மாதங்கள் முன்பு செய்தி வெளிவந்தது. அதனை மறுத்த சமந்தா, யு டர்ன் ரீமேக் செய்யப்பட்டால் அதில் நடிக்க விருப்பம் மட்டுமே தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.
 
தற்போது யு டர்ன் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது. சமந்தாவே யு டர்னின் ரீமேக் உரிமையை வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இது உண்மையா என்பதை சமந்தாதான் சொல்ல வேண்டும்.
அடுத்த கட்டுரையில்