‘காத்து வாக்குல ரெண்டு காதல்’… புகைப்படத்தோடு செம்ம அப்டேட் கொடுத்த சமந்தா!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (15:44 IST)
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து  இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார்.

இந்த படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இப்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இப்போது டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணியை நடிகை சமந்தா நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இயக்குனர் மற்றும் படக்குழுவினரோடு இருக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்