சிக்கந்தர் தோல்விக்குப் பின் சல்மான் கான் நடிக்கும் அடுத்த படம்… போஸ்டரை வெளியிட்டப் படக்குழு!

vinoth

சனி, 5 ஜூலை 2025 (12:47 IST)
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு இருப்பது போன்ற வெறித்தனமான ரசிகர்கள் இந்தி சினிமாவில் சல்மான் கானுக்கு உண்டு. அதனால்தான் அவர் மேல் பல சர்ச்சைகள், வழக்குகள் இருந்தும் இன்றளவும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

சமீபகாலமாக சல்மான் கானின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த ‘சிக்கந்தர்’ படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதனால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனக்கு அரிய வகை மூளை நோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சல்மான் கான் நடிக்கும் ‘கல்வான்’ என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  சல்மான் கான் மீசையோடு, முகம் முழுக்க இரத்தக் கறையோடு இருக்கும் போஸ்டர் இது ஆக்‌ஷன் மசாலா படம் என்பதைக் காட்டுகிறது. இந்த படத்தை அப்போர்வா லக்கியா இயக்கவுள்ளார். சித்ராங்கதா சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்