சாய் பல்லவிக்கு இது செட் ஆகுமா? அதுவும் ராணா உடனா...?

Webdunia
வியாழன், 2 மே 2019 (09:08 IST)
பிரேமம் நாயகி சாய் பல்லவி அடுத்து ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
பிரேமம், களி போன்ற மலையாள வெற்றி படங்களை கொடுத்துவிட்டு, அங்கிருந்து தெலுங்கில் ஃபிடா, எம்.சி.ஏ, தியா, படி படி லேசே மனசு போன்ற சாப்ட் கேரக்டர் படங்களில் நடித்துவிட்டு, தமிழில் அராத்து ஆனந்தியாக மாரி 2 படத்தில் களமிறங்கினார் சாய் பல்லவி. 
 
இதனை தொடர்ந்து தமிழில் சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆம், வேணு உடுகுலா இயக்க இருக்கும் விரத பர்தம் 1992 படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார். 
இந்த படத்திற்காக ராணா தனது உடல் எடையை அதிக அளவில் குறைத்து மெலிந்து காணப்படுகிறார். இந்நிலையில், தற்போதைய அப்டேட் என்னவெனில் சாய் பலல்வி இந்த படத்தில் நக்ஸலைட்டாக நடிக்கயுள்ளாராம். அதுவும் போலீஸை காதலிக்கும் நக்ஸலைட்டாக... 
 
நடிகைகள் பிரியாமணி மற்றும் தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாய் பல்லவியை அராத்து ஆனந்தியாகவே பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இப்போது நக்ஸலைட் கேரக்டர் அவருக்கு செட் ஆகுமா என்பது அவரது நடிப்பிலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதிலும்தான் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்