சாய் பல்லவி தமிழில் அறிமுகமாக இருந்த ‘கரு’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய் பல்லவி, தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அபார்ஷனை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை, ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
‘கரு’ படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேதியில் ரிலீஸாக பல படங்கள் போட்டி போடுவதால், பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நாக செளரியா, வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.