வைரலகும் சாய் பல்லவியின் டப்பிங் வீடியோ

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (20:08 IST)
பிரேமம் புகழ் சாய் பல்லவி நடித்துள்ள ‘ஃபிடா’ என்ற தெலுங்கு படத்திற்காக அவர் பேசும் டப்பிங் வீடியோ வைரலாகி வருகிறது.


 

 
தமிழ்நாட்டு பெண்ணான சாய் பல்லவி மலையாள படமான பிரேமம் படம் மூலம் அறிமுகமானார். அதில் மலர் டீச்சர் கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்களை வாரி குவித்தது. தமிழ், தெலுங்கு என பிரேமம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தெலுங்கில் ரீமேக் செய்தனர். 
 
இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது தெலுங்கில் சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘ஃபிடா’ அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்நிலையில் அந்த படத்திற்காக சாய் பல்லவி டப்பிங் பேசும் வீடியோவை படத்தின் இயக்குநர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். 
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளம் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் வைரலாக பரவி வருகிறது. 
 
அடுத்த கட்டுரையில்