விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் போன வாரம் தமிழ் பெண்கள் அழகா? கேரள பெண்கள் அழகா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதனால் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது