ஜகமே தந்திரம் படத்தை மிஸ் செய்த எஸ் ஜே சூர்யா… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த தகவல்!

சனி, 5 ஜூன் 2021 (14:53 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகிய படமாக ஜகமே தந்திரம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் எஸ் ஜே சூர்யாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அப்போது பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்