ஜுலையில் எஸ் 3 இசை - ஹாரிஸ் தகவல்

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (17:49 IST)
சிங்கம், சிங்கம் 2 இரண்டுக்கும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தார். சிங்கத்தின் மூன்றாவது பாகம், எஸ் 3 படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.


 
 
வேலை விஷயத்தில் ஹரியும், ஹாரிஸும் எதிர் துருவம். ஹரி பாஸ்ட் பாசஞ்சர் என்றால் ஹாரிஸ் கூட்ஸ் வண்டி. அவரிடமிருந்து ட்யூன் கிடைக்க தவம் இருக்க வேண்டும்.
 
இந்நிலையில், அதிசயமாக ஜுலை மாதத்தில் எஸ் 3 படத்தின் இசை வெளியாகும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்துள்ளார். இப்படியெல்லாம் அறிவிக்கிறவர் அல்ல ஹாரிஸ். இந்த வருடம் அவரது இசையில் கெத்து படம் மட்டுமே வெளிவந்தது. அதுவும் சுமார். எஸ் 3, இரு முகன் படங்கள் வந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தால் மட்டுமே அடுத்து வாய்ப்பு. 
 
ஹாரிஸின் அதிசய அறிவிப்புக்கு இதுவே காரணம் என்கிறார்கள். உண்மையா சார்?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்