தமிழில் சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம், பத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூமிகா. இவர் தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் 2007–ல் யோகா பயிற்சியாளர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு ஒதுங்கி இருந்த பூமிகா நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘யூடர்ன்’ படத்தில் நடித்துள்ளார்.