‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (18:11 IST)
இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ 
 
சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் திடீரென கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு, ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்
 
இந்த நிலையில் மீண்டும் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதே தேதியில்தான் சிவகார்த்திகேயனின் ’டான்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்