உலகம் முழுவதும் RRR முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் போஸ்டர்!

சனி, 26 மார்ச் 2022 (19:38 IST)
RRR திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக நேற்று வெளியானது.

இந்நிலையில் உலகளவில் இந்த படத்துக்கு செய்யப்பட்டுள்ள வியாபாரம் பற்றிய தகவல் சினிமா உலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 450 கோடி ரூபாயில் உருவான இந்த படம் இதுவரை 800 கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாம். தெலுங்கில் எடுக்கப்பட்ட படத்தை பேன் இந்தியா படமாக்கி செம்மையாக தயாரிப்பாளருக்கு கல்லா கட்டி கொடுத்துள்ளார் ராஜமௌலி என்று கருத்துகள் சொல்லப்பட்டன.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் முதல் நாள் வசூலாக 223 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் படைக்காத சாதனையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்