ரஜினி கமல் காம்போ… ஹீரோ vs வில்லன் – ராஜமௌலியின் ஆசை!

சனி, 26 மார்ச் 2022 (16:13 IST)
ரஜினி மற்றும் கமல்ஹாசனை இணைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதே தனது ஆசை என இயக்குனர் ராஜமௌலி கூறியுள்ளார்.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நேற்று வெளியானது. இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர்.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக தமிழ் இணைய சேனல் ஒன்றுக்காக அளித்த நேர்காணலில் ‘தமிழில் இதுபோல இரண்டு ஹீரோக்களை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் யாரை வைத்து இயக்குவீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி ‘கமல் மற்றும் ரஜினிதான். இருவரில் யாரவது ஒருவர் வில்லன். ஒருவர் ஹீரோ. இந்த ஐடியாவே என்னை அதிகம் சிலிர்ப்படைய செய்கிறது’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்