ஹாலிவுட் படத்தில் ஆர் .ஆர்.ஆர் பட நடிகை!

செவ்வாய், 8 மார்ச் 2022 (22:02 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆலியா பட் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து  ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இவர் தற்போது ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் முக்கிய வேடத்தில்  நடித்துள்ளார். இப்படம் வரும் 25 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதேபோல் கங்குபாய் கத்யாவாடி என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி வசூல்வாரிக் குவித்துள்ளது.

இ ந் நிலையில் ஹாலிவுட் படத்தில் ஆலியா பட் நடிக்கவுள்ளார். வொண்டர் வுமன் என்ற படத்தில் நடித்த ஹீரோயின் கல் கடோட் மற்றும்ஜேமி டோர்ன் ஆகியோருடன் இணைந்து ஆலியா பட்  நடிக்க, டாம் ஹார்பர் இயக்குகிறார்.  நெட்பிளிக்ஸில் உருவாகும் இப்படத்தை ஸ்கைடான்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்