தற்போது, நயன்தாரா தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ச் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க விஜய்சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேற்று ஈஸ்டர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினார். பின்னர், அவருடன் ரொமான்ஸாக செய்து பார்ப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதற்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர்.