நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலில் சக்கை போடு போட்டாலும் அவருக்கு பெரிய அளவில் விருதுகள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த குறையைப் போக்கும் விதமாக இயக்குனர் ராம் இயக்கத்தில் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளாராம்.